கிரகங்களின் பார்வை –
(விம்ஷோத்தாரீ, தாஜக் மற்றும் மேலை நாட்டு முறைப்படி)
விம்ஷோத்தாரீ
முறையில் சூரியனுக்கும் சனிக்கும் 1, 3, 7, 10 பார்வை
என்றும், செவ்வாய்க்கு
1, 4, 7, 8 பார்வை என்றும், குருவுக்கு 1, 5, 7, 9 இடங்களை
;பார்க்கும் என்றும், சுக்கிரன் 1 ,6, 7, 8 ஆகிய இடங்களை பார்க்கும் என்றும், இராகு, கேதுக்கள் 1, 3, 7, 11 ஆகிய இடங்களை பார்க்கும் என்றும், சந்திரனும் புதனும் 1, 7 ஆகிய இடங்களை மட்டும் பார்ப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் தாஜக் முறையில்
கிரகங்களின் பார்வை சற்று வித்தியாசமானது ஆகும். இம்முறையின் கண்டு
பிடிப்பாளர்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் தாம்.
ஒரு கிரகம் தன்
இருப்பில் சுமாராக பத்து பாகை வரை முன்பின் பார்க்க வல்லதாம்.
சூரியன் தான்
இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக 15 பாகை வரை பார்க்க
வல்லது. சந்திரனோ தானிருக்கும்
இடத்தில் இருந்து 12 பாகை வரை பார்க்க வல்லது. குருவும் சனியும் தானிருக்கும் இடத்தில்
இருந்து முன்பின்னாக 9 பாகை வரை பார்ப்பாராம். செவ்வாயோ தான் இருக்கும் இடத்தில் இருந்து
முன்பின்னாக 8 பாகை
வரை பார்ப்பார். மற்ற கிரகங்களான புதன், சுக்கிரன், இராகு, கேது ஆகியோர் தான்
இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக 7 பாகை வரை மட்டுமே
பார்ப்பாராம்.
இது விம்ஷோத்தாரீ
முறையில் உள்ள பார்வையாம்.
ஆனால் தாஜக் முறையில்
இவ்வாறு சொல்லப்படவில்லை. கூடலில் ஒரு பாகைக்குள் கூடிய கிரகங்கள் அதிக (நட்பு
கிரகமாயின் நல்ல பலனிலும், பகை கிரகங்களாயின் மோசமான) பாதிப்பையும் அடைகின்றன
என்றும், அந்த பாதிப்பு நன்மையாகவும் அல்லது கொடியதாகவும் இருக்கலாம் என்றும்
சொல்லப்படுகின்றது.
ஆனால் கூடலில் ஐந்து
பாகைக்குள் உள்ளவற்றை கூடலாக கொள்ளலாம் என்றும் ஒத்து கொள்ளப்பட்டுள்ளது. அதுவும்
அவ்விரு கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தில் இருக்குமானால் அப்பலன் வெகு உயர்வாய்
இருக்குமாம். அவ்விரு கிரகங்களும் நட்பாகி - இருந்த பாவத்தில் இருவரும் வலுவுடன்
இருந்தால் அக்கூடலின் பலன் வெகு உயர்வாய் அமையுமாம். அதுவும் இருவரும் நட்பாய்
இருக்க அப்பலன் வெகு உயர்வாய் அமைவது நிச்சயமாம். ஆனால் எதிரி கிரகங்களாயின்
அக்கூடலின் பலன் சுமார் தாம்.
நட்பாகிய
அசுபர்களாயின் அக்கிரக கூடலின் பலன் சுமாராகவே இருக்கும். உறவினரும் நலமுடன் ஆனால்
தீயவராய் இருப்பர். பகையாகிய அசுபர்களாயின் அக்கூடலின் பலன் மிக மோசமாக இருக்கும்.
மேலை நாட்டு
முறையிலும் நம் நாட்டு முறையிலும் கிட்டத்தட்ட கூடலை பொறுத்த வரை பலன்கள் சரியாகவே
சொல்லப்பட்டுள்ளன.
சூரியனும் குருவும்
மிதுனத்தில் அருகருகே அமர அந்த ஜாதகருக்கு தந்தை ஆசிரியராகவோ அல்லது வாயால்
பிழைப்பவராகவோ அமைகிறார். குரு அஸ்தமனம்
ஆனால் அவருக்கு ஆண் குழந்தை இல்லாமல் போகின்றது. பெண் குழந்தை மட்டுமே அமையும்.
ஆனால் தந்தையாலும் மகளாலும் ஜாதகர் உதவிகளை பெறுவார்.
விருட்சிகம்
லக்கினமாகி, பத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கூட, இங்கு சந்திரனும்,
சுக்கிரனும் அஸ்தமனம் ஆகிட, தந்தை மனக்கிளர்ச்சி உடையவனாகி, இன்னொரு பெண்ணை
விரும்புபவன் ஆவான். ஆகவே தந்தையிடம் இருந்து ஜாதகர் பிரிவாராம்.
இங்கு சூரியன்
நான்காம் இடத்தை பார்க்கின்றார். ஒருவேளை, சந்திரன் பாகை கணக்குப்படி
நான்காமிடத்தின் துவக்கத்தை பாராவிடில், நான்கில் சூரியன் நட்பாவதால் நல்ல அன்னை
உண்டாவாள்.
சூரியன் ஏழாமிடத்தை
பகை பார்வையாய் பார்க்கின்றார். ஆகவே அங்கு தனது பலனை இழந்து, சுக்கிரனின் பலனை
உயர்விப்பார். ஆக நல்ல கணவனை ஜாதகி அடைவாள்.
அன்பன்
அ.வீ.மாரிமுத்து
10.09.2016
அன்பன்
அ.வீ.மாரிமுத்து
10.09.2016