19. லக்கினங்களும் தனாதிபதியும்
இரண்டாம் அதிபதியே மூன்றாம் அதிபதியானால் - இது தனுசு லக்கினத்துக்கு மட்டுமே பொருந்தும் - அவரை நல்லவர் என்று சொல்ல இயலாது. என்றாலும் இவர்கேந்திரம் அல்லது கோணத்தில் வலுக்க, சுபத்வம் அடைந்திட உயர் பலனை செய்வார். இவர் மறைவிடங்களில் அசுபத்வம் அடைந்திட தீய பலனே.
அது என்ன சுபத்வம் என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகின்றது. ஒரு கிரகம் சுபர் பாவத்தில் நிற்பது சுபத்வம் ஆகும். அக்கிரகமே நட்பு, ஆட்சி, உச்சம் பெறுவதோ இன்னும் சுபத் தன்மையை அதிகரிக்கும். நட்பு ஆட்சி, உச்சம் பெற்றாலும் அம்சையில் உச்சம், ஆட்சி, நட்பு பெறுவது மிக முக்கியம்.
ஆட்சி பெற்றவர் அம்சையிலும் ஆட்சி பெற்றால் அது அவ்வளவு நல்லதில்லை. அதனால் நன்மையையும் தீமையும் கலந்தே பலன் அமையும். அது போல இராசியிலும் அம்சையிலும் உச்சம் பெற்றால் - இதனை வர்க்கோத்தமம் என்பர் - அக்கிரகத்தின் பலனை ஜாதகன் ஏற்கனவே பெற்றிருந்தாலும், அதற்கு மேல் முன்னேற இயலாது. அதாவது மாடி வீட்டு ஏழை தான்!
இராசியில் எப்படியோ அம்சையில் ஆட்சி, உச்சம், நீச்சபங்கம் அடைந்தால் அக்கிரகம் வலுவும் சுபத்வமும் அடைந்து விடும். ஒரு கிரகம் தனது சொந்த விண்மீனில் நின்று இராசி அல்லது அம்சையில் அக்கிரகம் ஆட்சி, உச்சம் அல்லது நீச்ச பங்கம் ஆகிட அக்கிரகம் வலுவுள்ளதாகின்றது. ஏதேனும் இரு கிரகங்கள் நல்ல பரிவர்த்தனை அடைந்திட, அவ்விரு கிரகங்களும் வலு அடைகின்றனவாம். அந்த கிரகங்கள் இருப்பில் நட்பு, உச்சம் ஆனால் அப்பல ன்கள் இளமையில் இருந்தே நடக்குமாம். பகை, நீச்சம் ஆனால் பொதுவாக இளமைக்கு மேல் நல்ல பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.
ஒரு கிரகம் எவர் வீட்டில் நின்றதோ அவ்வீட்டு நாதர் வலுக்க முன் கிரகத்தின் பலன் வலுவடையுமாம்.
எக்கிரகமும் பகை, நீச்சம் அடைந்த கிரகத்துடன் கூடவோ அல்லது பார்வை அடையவோ கூடாது. அது அவ்வாறானால் அக்கிரக காரக உறவினர் அவருக்கு எதிரி ஆவார். அல்லது கூடவே இருந்து குடி கெடுப்பார். நீச்ச பங்க கிரகத்துடன் இருந்தால் அவ்வுறவினரை நம்ப இயலாது. ஆனால் எப்போதும் உடன் இருப்பார்.
எந்த கிரகமும் சுபருடன் கூட அல்லது பார்வை அடைய அவை சுபத்வம் அடைகின்றன.
தனாதிபதியே ஐந்தாமாதியானால் அவர் பூரண சுபர் ஆகின்றார். இது ரிஷபம் மற்றும் விருட்சிக லக்கினங்களுக்கு மட்டுமே சாத்தியம்.
தனாதிபதியே ஏழாமாதியானால் அவர் அசுபரும் மாரகரும் ஆகின்றார். இது மேஷம் மற்றும் துலா லக்கினங்களுக்கு மட்டுமே அமையும்.
இவர்கோணத்தில் நின்று சுபத்வம் பெற்றிட நல்ல வருமானமும், நல்ல குடும்ப நிலையையும், நல்ல மனைவி மக்களையும் அடைவார். ஆனால் அசுபத்வம் அடைய தமது திசை, புத்திகளில் மோசமான பலனை மட்டுமே தருவார். இவர் இன்னொரு மாரக பாவத்தில் அல்லது லக்கினத்தில் நின்று அசுபத்வம் அடைய அவரது திசையில் மாரகம் அல்லது முற்றிலும் கொடிய பலனையும் மட்டுமே தருவார்.
தனாதிபதியே ஒன்பதாம் அதிபதியானால், அவர் பூரண சுபராவார். இது மீனம் மற்றும் கன்னி லக்கினங்களுக்கு மட்டுமே அமையும்.
தனாதிபதியே பதினோறாமாதியானால் அவரை சமர் என்றே சொல்ல வேண்டும். இது சிம்மம் மற்றும் கும்ப லக்கினங்களுக்கு மட்டுமே அமையும். இவர் பெற்ற வலுவை கொண்டே, இவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று முடிவு செய்யவேண்டும்.
கோணாதிபதி கோணத்திலேயே இருந்து வலுவும் சுபத்வமும் அடைவது உன்னத வலுவை அக்கிரத்துக்கு கொடுக்கும். இவருடன் இன்னொரு கோணாதிபதி அல்லது கேந்திராதிபதி கூடுவது அல்லது பார்ப்பது அக்கிரக வலுவை இன்னும் உயர்த்தும்.
கோணாதிபதி ஏதேனும் ஒரு கேந்திரத்தில் நின்று சுபத்வம் அல்லது வலுவடைய அது அக்கிரக வலுவை உயர்த்தும். இவருடன் இன்னொரு கோணாதிபதி அல்லது கேந்திராதிபதி கூட அல்லது பார்க்க அக்கிரக வலு இன்னும் கூடும்.
கோணாதிபதி தனம் அல்லது இலாபத்தில் நின்று வலுக்க, அதுவும் அக்கிரக வலுவை கூட்டுமாம். ஆனால் அவ்விடங்கள் மாரக பாவங்களாகி அக்கிரகம் அசுபத்வம் அடைய அவர் கெட்டதையே செய்வாராம்.
பொதுவாக கோணாதிபதி மறைவிடங்களில் நின்று அசுபத்வம் அடைவது தீதாம்.
அசுப கிரகம் கேந்திராதிபதியாகி எந்த கேந்திரத்திலும் அல்லது எந்த கோணத்திலும் நின்று வலுக்க, அவர் நல்லவர் ஆகி விடுகின்றார். ஆனாலும் அவர் நின்ற இடத்தில் சற்று மிதமான பலனை மட்டுமே தருவார்.
அசுப கேந்திராதிபதி தனம் அல்லது இலாபத்தில் வலுத்து நிற்க சமமான பலனையும், அசுபத்வம் அடைய தீய பலனையும் செய்வாராம்.
அசுப கேந்திராதிபதி மறைவிடங்களில் அசுபத்வம் அடைந்து நிற்பது மிக மோசமான பலனை மட்டும் செய்வார் எனலாம். இவர் சுபத்வம் அடைய சமமான பலனை செய்வார். அதிகம் பாதிக்க மாட்டார்.
சுப கிரகங்கள் கேந்திராதியாகும் போது - அது சுக்கிரன், சந்திரனாயின் ஏழு பத்தாமாதியாகி, ஏழு பத்தில் அமர்வதுவும் - அது குரு, புதனாயின் அவர் நான்கு, ஏழு, பத்தாமாதியாகி, நான்கு, ஏழு, பத்தில் அமர்வது தீதாம்
மிதுன லக்கினமாகி, நான்காமாதியாகிய புதன் நான்கில் உச்சமாகி அமரலாம். அது உயர்வே. தனுசு லக்கினமாகி நான்காம் அதிபதியாகிய குறு நான்கில் அமர்வது நன்மையையும் தீமையும் கலந்த பலனையே தரும். இவரை சூரியன் அல்லது செவ்வாய் பார்க்க உயர் பலனை தருவார். ஆனால் சுக்கிரன் அல்லது பாம்புகள், சனி ஆகியோரால் பார்க்கப்பட தீய பலனையே தருவாராம்.
தனாதிபதி, மூன்றாமாதிபதி, இலாபாதிபதி மற்றும் விரயாதிபதி ஆகியோர் கோணத்தில் சுபத்வம் அடைந்து இருக்க அவர்கள் நல்லவர் ஆவாராம். ஆனால் இவர்களே அசுபராகி அவ்வாறு இருக்க - அவ்வீட்டு பலன் சுமார் தாம்.
எப்போதும் தனாதிபதியும் விரயாதிபதியும் விரயம், லக்கினம, தனத்தில் கூடவோ அல்லது பரிவர்த்தனை அடையவோ கூடாது.
அதுபோல எப்போதும் இலாபாதியும் விரயாதிபதியும் இலாபம் மற்றும் விரயத்தில் கூடவோ அல்லது லக்கினத்தில் நிற்கவோ கூடாது. அவ்விருவரும் பரிவர்த்தனையும் அடைதல் கூடாது.
அதுபோலவே பாக்கியாதியும் எட்டாமாதியுமாம்.
மீண்டும் அடுத்த பகுதியில் காண்போம்.
அன்பன்
அ .வீ. மாரிமுத்து
02 - 08 - 2016

No comments:
Post a Comment