இராசிகளும் கிரகங்களும்
இராசிகள் அல்லது பாவங்கள் 12 என்று சொன்னோம்.
இவ்வீடுகளுக்கு அதிபர்களாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என்று ஏழு கிரகங்கள்
அதிபர்களாக உள்ளனர்.
சூரியனுக்கு
சிம்மமும், சந்திரனுக்கு
கடகமும், செவ்வாய்க்கு
மேஷம், விருட்சிகம்
ஆகிய இரண்டு வீடுகளும், புதனுக்கு
மிதுனம், கன்னி
ஆகிய இரு வீடுகளும், குருவுக்கு
தனுசு, மீனம்
ஆகிய இரு வீடுகளும், சுக்கிரனுக்கு
ரிஷபம், துலாம்
ஆகிய இரு வீடுகளும், சனிக்கு
மகரம், கும்பம்
ஆகிய இரு வீடுகளும் சொந்தமாம்.
இராகு
கேதுக்களுக்கு சொந்த வீடு கிடையாதாம். ஆனால் அவர்கள் நிற்கும் வீட்டை அவர்கள் தன
சொந்த வீடாக கருதி ஆட்சி செய்வராம்.
ஜோதிடத்தில்
சொந்தம் என்பதற்கு ஆட்சி வீடு என்று குறிக்கும் வழக்கம் உள்ளதை அறியவும். ஒருவர்
தனது வீட்டில் இருக்கையில் அவரது இஷ்டத்துக்கு இருக்கலாம். அவரது சுதந்திரம்
அளவற்று இருக்கும். அதுபோல் ஆட்சி பெற்ற கிரகமும் நூறு விழுக்காடு வலு அடைந்து
முழு பலனை கொடுக்கும்.
என்றாலும்
இவ்விதிக்கும் சிறு விதிவிலக்குகளும் உள்ளன. அதனை பின்னர் சொல்ல உள்ளேன்.
ஒருவர்
தனது மாமியார் வீட்டுக்கு சென்றால் அவருக்கு கிடைக்கும் மரியாதைகளும் வரவேற்பும்
மிக உயர்வாக இருக்கும். அது போலவே சூரியன் மேஷத்திலும், சந்திரன் ரிஷபத்திலும், செவ்வாய் மகரத்திலும், புதன் கன்னியிலும், குரு கடகத்திலும், சுக்கிரன் மீனத்திலும், சனி துலாத்திலும் இருக்க -
அந்தந்த கிரகங்கள் உச்சம் பெறுவதாக ஜோதிட வல்லுனர்கள் சொல்வர். அங்கு அந்தந்த
கிரகங்கள் 125% வலு பெறுவதால் அங்கு அக்கிரகங்கள் இன்னும் உயரிய பலன்களை தருமாம்.
இதற்கும்
ஒரு சில விதி விலக்குகள் உண்டு.
நம்
வீட்டுக்கு பிரதம மந்திரி அல்லது முதன் மந்திரி அல்லது புகழ் பெற்ற ஒரு மனிதர்
வந்தால், அவருக்கு
நம் வீட்டில் எவ்வளவு மரியாதைகளும் வரவேற்பும் அளிக்கப்படும் என்பதை சற்று
நினைத்து பாருங்கள்.
அது
போல சூரியன் சிம்மத்திலும், சந்திரன்
ரிஷபத்திலும், செவ்வாய்
மேஷத்திலும், புதன்
கன்னியிலும், குரு
தனுசிலும், சுக்கிரன்
துலாத்திலும், சனி
கும்பத்திலும், இராகு
அல்லது கேது விருத்சிகத்திலும் இருந்தால் அந்நிலையை மூலத் திரிகோணம் என்கிறோம். அங்கு
அந்தந்த கிரகங்கள் 108% வலு அடைவதாக ஜோதிட வல்லுனர்கள் சொல்லுகின்றனர்.
ஒரு
சில இடங்களுக்கு நாம் செல்லுகையில் அங்குள்ள பலர் நம்மை நன்கு மதிப்பதுவும், அங்குள்ள வேறு சிலர் நம்மை
வந்தால் வந்து விட்டு போகட்டுமே என்று இருப்பதுவும் நமக்கு தெரியாமல் போவதில்லை.
அதுபோலவே கிரகங்கள் ஒரு சில இடங்களில் நட்பு என்ற நிலை அடைந்து - அவ்விடத்தில்
தமது பலனை கூடியவரையில் நன்மையாகவே நடத்தி செல்வதும் உண்டு. அவ்வப்போது எதிர்பாராத
தீய பலன்களும் வந்து போவதுண்டு. கிரகங்கள் நட்பு பெறும் இராசிகளில் 75% வலு அடைகிறார்கள்.
ஒரு
சில இடங்களுக்கு நாம் போனால் இவன் ஏண்டா இங்கு வந்து தொலைத்தான் என்று அங்குள்ள
பலரும் நினைப்பதை சற்று மனதில் நிறுத்தி பாருங்கள். அதுபோலவே கிரகங்கள் ஒரு சில
இடங்களில் நிற்கையில், அவ்வீடு
அவர்களுக்கு பகை வீடு ஆகின்றன. இங்கு அக்கிரக பலன்கள் நன்மையாக அமையாது. கிரகங்கள்
அப்படிப்பட்ட பகை வீட்டில் 50% வலுவை அடைகின்றன.
பகைவன்
வீடாக இருந்தாலும் காரியம் ஆக வேண்டி இருந்தால், மரியாதை கிடைக்காது
என்றாலும், போய்
தானே ஆக வேண்டியுள்ளது. கிரகங்கள் பகை பெறும் வீடுகளில், பயனுள்ள பலன்களை சிறப்பாக
அடைய விடுவதில்லை.
ஒரு
சில இடங்களில் கிரகங்கள் தன் வலிமையை 25% அளவுக்கு இழந்து போகின்றன.
அவ்வீடுகளை நீச்ச வீடுகள் என்கிறோம். மனைவியை மதிக்காதவன், மாமியார் வீட்டுக்கு போனால்
அவனுக்கு என்ன வரவேற்பும், மரியாதையும்
கிடைக்கும் என்பதை ஒப்பு நோக்கி இந்த இடத்தில் கிரக வலுவை நிர்ணயம் செய்ய
வேண்டும்.
பொதுவாக
உச்ச வீட்டுக்கு நேர் எதிர் வீடு அக்கிரகத்துக்கு நீச்ச வீடாக இருக்கும்.
இது
வரை கிரக வலிமையை பார்த்தோம்.
இன்னும்
சொல்ல உள்ளேன், அடுத்த
பகுதியில்.
அ. வீ. மாரிமுத்து
24
- 07 - 2016
No comments:
Post a Comment