16. மறைவிடங்களும் தன இலாப மூன்றாமிடங்களும்
3, 6, 8, 12 ஆமிடங்களை பொதுவாக மறைவிடங்கள் என்பர். இவற்றுள் 6, 8, 12 ஆமிடங்களை முழுதும் கொடிய பாவம் என்பர்.
ஆனால் மூன்றாமிடத்தை பாதி சுப பாவம் என்பர். அதாவது பாதி அசுப பாவமும் ஆகும். இந்த மூன்றாமிடம் சுபரது பாவமாகிய கடகம், மிதுனம், கன்னி, துலாம், ரிஷபம், தனுசு, மீனம் ஆனால், அவை முழு சுப பாவம் ஆகும். இந்த பாவங்களை சுபர் மட்டும்பார்க்க அல்லது அதில் இருக்க அந்த மூன்றாமிடம் பூரண சுப பாவம் ஆகி விடும். இவற்றை அசுபர் மட்டும் பார்க்க அல்லது அதில் இருக்க அந்த மூன்றாமிடம் ஓரளவே நல்ல பாவம் ஆகும்.
இதே மூன்றாமிடம் அசுபரது பாவமாகிட, அவை அசுப பாவம் ஆகிவிடும். இவற்றை அசுபர் மட்டும் பார்க்க அல்லது அங்கிருக்க, அவை முற்றிலும் கொடிய பாவம் ஆகி விடும். இந்த அசுப மூன்றாமிடத்தை சுபர் மட்டும் பார்க்க ஓரளவு நல்ல பாவமாக மாறும்.
இரண்டாம் இடத்தை தன பாவம் என்றும், பதினோராம் இடத்தை இலாப பாவம் என்றும் சொல்வர். இவற்றை நல்ல பாவம் அல்லது அசுப பாவம் என்று சொல்வதற்கு முன்னர், வேறொரு விஷயத்தை இங்கு சொல்லியாக வேண்டும்.
இராசிகளில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவற்றை சர பாவம் என்பர். சரம் என்றால் எப்போதும் இயங்கி கொண்டிருப்பது என்று பொருள். அதாவது சர லக்கினத்தில் பிறந்தவர்கள் எப்போதும் உழைத்து கொண்டே இருப்பர். இவர்கள் ஓய்வெடுத்து பழக்கப் பட்டவர்கள் அல்ல. இவர்கள் பொதுவாக பிறந்த ஊரில் இருக்க மாட்டார்கள். திருமணத்துக்கு பின்னர் அல்லது வேலை வந்த பிறகு வேறொரு ஊருக்கு போய் அங்கேயே தங்கி விடுவர்.
சர இராசியில் பிறந்தவர்களோ, இன்று ஒன்றை பேசி, நாளை ஒன்றை பேசும் நிலையற்றவராய் இருப்பார். இப்படிப்பட்ட சர இராசி அல்லது லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 2 ஆமிடம், 7 ஆமிடம், 11 மிடம் ஆகியவை மாரக பாவங்கள் ஆகும். அதாவது ஜாதகனுக்கு மரணத்தை செய்யும் இடங்களாகும். இந்த இடங்களில் நின்ற அசுபர்களோ அல்லது இந்த இடத்து அதிபதிகளோ ஜாதகருக்கு அவரவரது திசை, புத்திகளில் மரணத்தை தருவாராம். அதாவது அவர்களுள் எவர் அதிகம் அசுபரோ அவர் தம் திசையில் நிச்சயம் பூரண ஆயுள உள்ளவருக்கு மரணத்தை தருவார். குறை ஆயுள் உள்ளவருக்கு முதலில் வரும் மாரகரது திசையில் நிச்சயம் மரணம் ஏற்படும்.
ரிஷபம், சிம்மம், விருட்சிகம், கும்பம் ஆகிய இராசிகளை ஸ்திர பாவம் என்பர். இப்படிப்பட்ட லக்கினங்களில் பிறந்தவர்கள் நிலையான மனமும், நிலையான கொள்கையும் உடையவர்கள். பொதுவாக பிறந்தது முதல் இறக்கும் வரை ஒரே ஊரில் இருக்கும் தன்மை கொண்டவர்கள். இந்த லக்கினம் அல்லது இராசியில் பிறந்தவர்களுக்கு 3, 8, 9 ஆகிய இடங்கள் மாரக பாவங்களாகி விடும். இந்த பாவங்களில் உள்ள அசுபரும், அந்த பாவங்களுக்கு அதிபர்களும் ஜாதகருக்கு மரணம் அல்லது தீய பலனை செய்யும் அதிகாரிகளாம்.
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய பாவங்களாம். இவை ஒரே இடத்தில் இருந்தும் - ஆனால் சுழன்ற வண்ணம் இருக்கும் இராசிகளாம். கொஞ்சம் உங்கள் மனக்குதிரையை கொண்டு, அந்த காலத்து செக்கையும் அல்லது இந்த காலத்து மணிமுள், நிமிட முள் உள்ள சுவர் கடிகாரத்தையும் எண்ணி பாருங்கள். அவையே உபய லக்கினத்திற்கு சரியான உதாரணம் ஆகும்.
இவற்றை லக்கினமாகவோ அல்லது இராசியாகவோ கொண்டவர்கள் கிணற்று தவளையாக இருப்பர். வெளியூரில் வேலை செய்தாலும் பொழுது போவதற்குள் வீட்டை எட்டி பார்த்து விடுவார்கள். இவர்கள் பாசமும் பந்தமும் மிக்கவர்கள். ஆனால் சுய நலமும் மிக்கவர்கள். கடின உழைப்பாளிகள்.
இந்த பாவங்களை லக்கினமாகவோ அல்லது இராசியாகவோ கொண்டவருக்கு 7, 11 ஆகிய இடங்கள் மாரக பாவங்களாம். இவ்விடத்தில் நின்ற அசுபர்களும் அல்லது அவ்விடத்து அதிபதிகளும் ஜாதகனுக்கு மரணம் அல்லது தீய பலனை செய்வாராம்.
சரத்தில் உதித்தோர்க்கு தனமேழு இலாபம் ஆகா என்பதையும், ஸ்திரத்தில் உதித்தோருக்கு மூன்றெட்டு நவம் ஆகா என்பதையும், உபயத்தில் உதித்தார்க்கு ஏழும் இலாபமும் ஆகா என்பதையும் மறவாமல் நினைவில் கொள்க.
இபோது பன்னிரண்டாம் பாவம் மட்டுமே நல்ல பாவமா அல்லது கெட்ட பாவமா என்பது நம் முன் முடிவு செய்யப்படாமல் உள்ளது. இதுவும் பாதி சுபம் மிக்கதும், பாதி அசுபம் மிக்கதுமான பாவமாம். இது சுபரது இராசியானால் சுப பாவமென்றும், அசுபரது பாவமானால் அசுப பாவமென்றும் கொள்வோரும் உண்டு.
ஒரு லக்கினம் அல்லது இராசிக்கு (இராசி என்றால் இனி சந்திரன் அமைந்த இடம் என கொள்க) எந்த கிரகம் சுபர், எந்த கிரகம் அசுபர், எந்த கிரகம் மாரகர் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.
அன்பன்
அ . வீ . மாரிமுத்து 31 -07 -2016

No comments:
Post a Comment