உதாரணம்
துர்முகி
வருடம் ஆடி மாதம் 5 ஆம் தேதியின் காலை சூரிய உதயத்தில் ஆடி மாதத்துக்கான
கடக இராசியின் பாக்கி 4 நாழிகையும் 44 வினாழிகையும் உள்ளதாக கண்டோம்.
ஆனால் ஜாதகி பிறந்ததோ 40 நாழிகை 25 விநாழிகை ஆகும்.
கடக இருப்பு 4 - 44
சிம்மம் 5 - 04 இதுவரை மொத்தம் 09 - 48
கன்னி 5 - 00 கன்னி வரை நாழிகை 14 - 48
துலாம் 5 - 12 துலாம் வரை நாழிகை 20 - 00
விருட்சிகம் 5 - 27 விருட்சிகம் வரை நாழிகை 25 - 27
தனுசு 5 - 20 தனுசு வரை நாழிகை 30 - 47
மகரம் 4 - 48 மகரம் வரை நாழிகை 35 - 35
கும்பம் 4 - 20 கும்பம் வரை நாழிகை 39 - 55
மீனம் 4 - 14
இந்த
மீன இராசியில் அன்றைய சூரிய உதயத்தில் இருந்து நாழிகை 39 -55 இல் இருந்து
நாழிகை 44 - 09 வரை மீனம் கிழக்கில் உள்ளதாக அர்த்தம் ஆகின்றது. அதாவது
அப்போது பிறந்த அந்த ஜாதகியின் லக்கினம் மீனம் ஆகும்.
இதிலும் துல்லியமாக மீனத்தின் இத்தனையாவது பங்கில் லக்கினம் உள்ளது என்று கூட, ஜாதக கணிப்பில் ஜோதிடர்கள் அக்கறை காட்டுகின்றார்கள்.
ஒரு இராசியை 9 பங்கு செய்வது நவாம்சம் எனப்படும். அதனை எவ்வாறு காண்பது?
மீனத்தின்
நாழிகை 4 - 14 என்று மேலே குறிப்பிட்டு உள்ளது. இதனை வினாழிகை ஆக்க - ஒரு
நாழிகைக்கு 6௦ வினாழிகை என்ற முறையின்படி - 254 வினாழிகை என்றாகின்றது.
இந்த
254 விநாழிகையை 9 ஆல் வகுக்க - 28 விநாழிகையும் 13 உப வினாழிகையும் வரும்.
ஆக மீனத்தில் அமைந்த நவாம்சம் ஒவ்வொன்றுக்கும் 28 வினாழிகையும் 13 உப
வினாழிகையும் உண்டு என்பதை அறியுங்கள்.
மீன லக்கினமோ நாழிகை 39 - 55 இலிருந்து 44 - 09 வரை நிலவுகின்றது. குழந்தை பிறந்தது நாழிகை 44 - 25 ஆகும்.
மீன லக்கினத்தின் துவக்கம் 39 -55 ஆகும்.
குழந்தை பிறந்த போது மீனத்தில் லக்கினம் நகர்ந்த நாழிகை ( 44 - 25 இலிருந்து 39 - 55 ஐ கழிக்க 30 விநாழிகை ஆகும்.
ஆனால்
மீனத்தின் முதல் நவாம்சம் சுமார் 28 விநாழி ஆகும். குழந்தை பிறந்த போது
மீனத்தில் 30 நாழிகை ஏற்கனவே சென்று விட்டது. ஆகவே மீன லக்கினத்தின்
இரண்டாவது நவாம்சையில் ஜாதகி பிறந்துல்லாள் என்று அறியலாம்.
இதனை பாகை கணக்குப்படியும் சொல்லலாம்.
மீன
லக்கினத்தின் சென்ற விநாழிகை 30 ஆகும். அம்மீனத்தின் மொத்த விநாழிகை 254
ஆகும். இந்த மீனத்தின் மொத்த நாழிகையாம் 254 அந்த மீனத்துக்கு உண்டான 30
பாகைக்கு சமம் ஆகும்.
ஆகவே மீன லக்கினத்தின் ஒரு பாகை (254/30 = ) 8.46 விநாழிகை ஆகும்.
மீனத்தின் முதல் பாகை மீனத்தின் துவக்கத்தில் இருந்து 8. 46 விநாழிகையாம்.
மீனத்தின் இரண்டாம் பாகை 17 -32 வரை இருக்கும்.
மீனத்தின்
மூன்றாம் பாகையோ 26 -18 வரை இருக்கும். அதற்கு மேல் வரும் நான்காம் பாகையோ
35 -04 வரை இருக்கும். ஆனால் மீனத்தில் லக்கினம் சென்ற நாழிகை 3௦ ஆவதால்,
ஜாதகி மீன லக்கினத்தின் 3 பாகைக்கு மேல் 4பாகைக்குள் பிறந்துள்ளாள் எனலாம்.
அதனையும் இன்னும் துல்லியமாக சொல்லலாம். போக போக அது தானாகவே உங்களுக்கு புரியும்.
மீண்டும் சந்திப்போம்.
அன்பன்
அ.வீ. மாரிமுத்து
27 - 07 - 2016
No comments:
Post a Comment