முத்து சா மீ
நான்
உயர்நிலைப் பள்ளியில் பயின்ற போது, அங்கு கிருஷ்ணமூர்த்தி என்ற ஆசிரியர்
இருந்தார். அவர் ஆங்கில பாடம் நடத்தும் முறையே அலாதியாகும். சிறிதாய்
சொல்லி பெரிய விஷயங்களையும் மனதுள் புகுத்தி விடுவார்.
அவர் ஆங்கில இலக்கணம் எடுக்கும் அழகில் ஒரு வித்தையை இங்கே சொல்வதில் எனக்கு அலுப்பு எப்போதும் ஏற்பட்டதில்லை.
Rama ate a mango - ராமன் ஒரு மாம்பழம் சாப்பிட்டான்.
இது நேரிடை வாக்கியம் - அதாவது active voice.
A mango was eaten by Rama - ஒரு மாம்பழம் ராமனால் சாப்பிடப்பட்டது. இது எதிரிடை வாக்கியம் - அதாவது Passive voice.
இவ்வாறு பற்பல உதாரணங்களை சொல்லிய பின்பு - முத்துசாமீ என்றார்.
எங்களைப் பார்த்து - நான் சொன்ன இந்த வார்த்தை என்ன வகை வாக்கியம் (active or passive voice) என்றார்.
முத்துசாமீ என்பது பெயர் சொல் அல்லவா? அது எப்படி நேரிடை அல்லது எதிரிடை வாக்கியம் ஆகும் என்றோம் நாங்கள்.
அவர் சிரித்தபடி கரும்பலகையில் - Muthu saw me - என்று எழுதினார். இப்போது இது என்ன வாக்கியம் என்றார்.
அது நேரிடை வாக்கியம் என்றோம்.
இதற்கு எதிரிடை வாக்கியம் என்ன என்றார். நாங்கள் சொன்னோம்.
நான் அவரை கேட்டேன். இவ்வாறு சொல்கிறீர்களே, இது எவ்வாறு ஐயா என்று வினவினேன்.
நாங்கள் (ஆசிரியர்கள்) உங்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கிறோமே. எதற்காக?
நாங்கள் கற்று கொண்டதை புரிந்து கொண்டோமா என்று சோதிப்பதற்காக!
நாங்கள் சொன்ன பதிலை கேட்ட பின்னர் அவர் சொன்னார்.
அதுபோல் நாங்களும் வீட்டில் Home work செய்வோம். உங்களுக்கு எப்படி எப்படி சொன்னால் எளிதில் புரியும் என்று!
ஆம்! கலைமகளே இன்னும் படித்து கொண்டு தானே இருக்கிறாள்!
எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் இப்போது புரிகின்றது.
அன்பன்
அ.வீ.மாரிமுத்து
No comments:
Post a Comment